வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது குறித்து மத்திய அரசு தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

வங்காளத்தில் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பிரதமராக ஷேக்ஹசீனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்பு அந்நாட்டில் வசித்துவரும் இந்து மதமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது ஜமாத் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதனுடன் ஆயிரக் கணக்கான இந்துமக்களின் கடைகள் தீவைத்து கொளுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவேண்டும் என்று மத்திய அரசை பாஜக கேட்டுகொண்டுள்ளது.

அண்டை நாட்டில் நடைபெற்றுவரும் நிலைமையை கண் காணித்து வருவதாக அரசு கூறிவருகிறது. ஆனால் ஜெஸ்சோர் போன்ற மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான இந்து வீடுகள் மற்றும் கடைகள்மீது தீ வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கான இந்துமக்கள் பாதுகாப்பு தேடி நிவாரண முகாம்களுக்கு சென்றுவிட்டனர். நாட்டில் வசிக்கும் இந்துமக்கள் மீதான தாக்குதலுடன் 12க்கும் அதிகமான கோவில்களை அந்த கும்பல் தாக்கி அழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

Leave a Reply