பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவுசெய்வதில் ஆம் ஆத்மிக்கு என்ன வேலை என கோவா முதல்வர் மனோகர்பாரிக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக.,வின் பிரதமர் வேட்பாளரான மோடியை மாற்றி விட்டு துணிச்சல் இருந்தால் கோவா முதல்வர் பாரிக்கரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க அறிவிக்கவேண்டும் என ஆம் ஆத்மி சவால் விட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனோகர் பாரிக்கர், நான் பிரதமர்வேட்பாளரா இல்லையா என்பதை தீர்மானிக்க ஆம் ஆத்மி யார்? அது என்னுடைய கட்சியின் முடிவு. என்னுடைய கட்சி அது பற்றி என்னிடம் கேட்டால் நான் அது குறித்து சிந்தித்து கொள்கிறேன்.. என்றார்.

Leave a Reply