ஊழல்வழக்கில் சாட்சியங்களைக் கலைக்க முயன்ற புகாரில், தில்லிபிரதேச சட்ட அமைச்சர் பதவியில் இருந்து சோம்நாத் பார்தி விலகவேண்டும் என்று வலியுறுத்தி பிரதேச பா.ஜ.க.,வினர் காவல்துறை தலைமையகம் முன்பாக புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க தொண்டர்கள் தில்லி காவல்துறை தலைமையகம் முன்பு கூடினர். பிறகு தில்லிபிரதேச சட்ட அமைச்சர் சோம்நாத் பார்திக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்த்திமெஹ்ரா பேசுகையில், “சாட்சியங்களை அழித்ததாக அமைச்சர் சோம்நாத்பார்தி மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்றமும் அவருக்கு கண்டனம்தெரிவித்துள்ளது.

ஒருசட்ட அமைச்சராக இருப்பவர் சட்ட விரோத செயலைச் செய்யமுடியாது. இது பெரியவிவகாரம். ஆகவே, அமைச்சர் சோம்நாத் பார்தியை பதவியில் இருந்து நீக்கவலியுறுத்தி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் மனு அளிக்கப்படும்’ என்றார்.

Leave a Reply