மோடியுடன் ராகுல் காந்தியை ஒப்பிடவேகூடாது. மோடி புலியை போன்றவர். அவரது சீற்றத்துக்கு முன்னால் ராகுல்காந்தி பறவைக்கு இணையானவர் என்று மேனகா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தலை ஆட்டி பொம்மையான மன்மோகன்சிங்கை பெயரளவுக்கு நாட்டின் பிரதமர்பதவியில் உட்காரவைத்து விட்டு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்தான் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை நடத்திவருகின்றனர்.

பாஜக.வின் பிரதமர் பதவிவேட்பாளர் மோடியுடன் ராகுல்காந்தியை ஒப்பிடவேகூடாது. மோடி புலியை போன்றவர். அவரது சீற்றத்துக்கு முன்னால் ராகுல்காந்தி பறவைக்கு இணையானவர்.

இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியை சோனியாவோ, ராகுலோ, பிரியங்காவோ யாராலும் காப்பாற்றவே முடியாது. காங்கிரசின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் எப்போதோ முடிவெடுத்துவிட்ட நிலையில், பிரியங்காவின் கவர்ச்சிமட்டுமே காங்கிரஸ் கட்சியை காப்பாற்றி விடப்போவதில்லை என்றார்

Leave a Reply