நாட்டின் வளர்ச்சிக்கு சரியானதலைமை அவசியம் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். புதன் கிழமை நடந்த பிக்கி கருத்தரங்கில் தொழில் அதிபர்கள் முன்னிலையில் இந்தகருத்தை மோடி தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு மருத்துவம், கல்வி, விவசாயம், சேவைத்துறை, இயற்கைவளங்கள் ஆகிய துறைகளில் கவனம்செலுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடையமுடியும் என்றார். நாம் சரியாக திட்டமிடும்போது, வளர்ச்சியை நம்மால் எட்டமுடியும். தொழிற்துறை வளர்வதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை.

இதற்கு தொழில் துறையினருக்கு நம்பிக்கை இல்லை. தொழில் துறையினருக்கு நம்பிக்கையும், தொழில் துவங்குவதற்கான சூழ்நிலையையும் உருவாக்குவது இந்தியாவுக்கு அவசியம். இருந்தாலும் இன்னும் நம்பிக்கை உள்ளது . சரியான தலைமை கிடைக்கும்பட்சத்தில் தற்போதைய நிலை முற்றிலும் மாறும் என்றும் மோடி தெரிவித்தார். வரிசீரமைப்பு பற்றி கேட்டதற்கு, அது நிதித்துறை சார்ந்தவல்லுனர்கள் சம்பந்தபட்டது. இருந்தாலும் வரிகளை எளிமைப்படுத்துவதுதேவை என்றார்.

வளர்ச்சியை பற்றி பேசும்போது அடிப்படைக் கட்டமைப்புத் துறையைப் பற்றி பேசாமல் இருக்கமுடியாது. ஆனால் எரிசக்தி இல்லாமல் கட்டமைப்புத்துறை கிடையாது. ஆனால் பல தொழிற்சாலைகள் தேவையான எரிசக்தி இல்லாமல் மூடிக்கிடக்கின்றன. இதற்கு யாராவது பொறுப்பேற்கவேண்டும் என்றார் மோடி.

Leave a Reply