மக்களவை தேர்தலில் பாஜக.,வுக்கு பெரும்பான்மை கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, காங்கிரஸ் கட்சி அனைத்து வகையான தந்திரங்களையும் கையாள்வதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் பாஜக.,வின் தேசிய செயற்குழு மற்றும் கவுன்சில்கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தின் முதல் நாளான நேற்று தேசிய செயற் குழுவும் இன்று முதல் இரண்டுநாட்களுக்கு கட்சியின் தேசியகவுன்சில் கூட்டமும் நடைபெறுகின்றன.

இதில் பேசிய பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், ஊழல், நிர்வாகத்தில் தவறுகள் மற்றும் முடிவு எடுக்கமுடியாமை போன்ற காரணங்களால் காங்கிரஸ் அரசின்மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில், கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங், மூத்த தலைவர் எல்கே. அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply