பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியால் நாட்டின் பிரதமராக முடியாது என்றும், டீவிற்க அவர் விரும்பினால் அதற்காக இடம் ஒதுக்கித்தரப்படும் என்ற காங்கிரஸில் காணாமல் போன தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் ஐயரின் திமிரு பேச்சு பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

நரேந்திரமோடி, தன் சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்ததை பரிகாசிக்கும் விதமாக மணிசங்கர் ஐயரின் பேச்சு இருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்துதெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தரம் தாழ்ந்து சிந்திப்பவராக மணிசங்கர் ஐயர் உள்ளதாக விமர்சித்தார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கப் போவது உறுதி என்பதால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாகவே மணிசங்கர் ஐயர் அவ்வாறு பேசியிருப்பதாகக் கூறிய ஜவடேகர், மோடியை பிரதமராக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டதாக குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளிமனோகர் ஜோஷி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யார் டீவிற்கப் போகிறார்கள், யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பது தெரிந்து விடும் எனக் கூறியுள்ளார்.

பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜெட்லி கூறியதாவது , “வாரிசுரிமை அரசியலை முன்னாள் டீவியாபாரி முறியடிக்கும்போது இந்திய ஜன நாயகத்தின் வலிமை நிச்சயமாகவெளிப்படும். டீ விற்றவருக்கும், வாரிசுரிமை இளவரசருக்கும் இடையிலான 2014ம் ஆண்டின் யுத்தமாக இந்ததேர்தல் அமையட்டும்” என்று விமர்சனம்செய்தார்.

Leave a Reply