பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு டீ கடை வைத்து தருகிறோம் எனக் கூறிய மணிசங்கர் அய்யருக்கு பாஜக., தலைவர் ராஜ்நாத்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத்சிங், இது காங்கிரசின் மனப்பான்மையை காட்டுகிறது. பாஜக.,வில் டீவிற்பவர் பிரதமராகலாம். விவசாயி கட்சி தலைவராகலாம். ஆனால் காங்கிரசில் குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களே பிரதமர்பதவிக்கு வருகின்றனர் அல்லது முடிவுசெய்கின்றனர்.

தனிப்பட்ட முறையில் தாக்கிபேசியோ அல்லது தவறான வழக்குகளில் சிக்கவைக்க நடவடிக்கை எடுத்தோ மோடியின் புகழை குலைக்க காங்கிரஸ் முயற்சிசெய்து வருகிறது . மோடி தலைமையில் குஜராத்தை போல் இந்தியாவும் வளர்ச்சிபெறும் . காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப் பிரிவு, அந்த மாநிலத்திற்கு வளர்ச்சியை வழங்கினால், அந்தபிரிவை பாஜக., ஏற்றுக் கொள்ளும், காஷ்மீர் மாநிலம் நமக்கு மிகவும் முக்கியமான மாநிலம், 370வது சட்டப் பிரிவின் கீழ் அம்மாநிலம் வளர்ச்சிபெற்றால், அந்த சட்டப்பிரிவில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை என கூறினார்.

Leave a Reply