பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை, டீ வியாபாரி என, கிண்டலடித்த, மணி சங்கர் அய்யருக்கு, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; குஜராத் முதல்வர் நரேந்திரமோடியிடம், எதிர் மறையான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், நம்மைப்போன்ற தலைவர்களிடம் இல்லாத, சாதகமான ஒருஅம்சம், அவரிடம் உள்ளது. சாதாரண குடும்பத்தில் இருந்து, அரசியலுக்கு வந்தவர் என்பதுதான், அந்த அம்சம். எளிமையான பின்னணியில் இருந்துவந்து, அரசியலில் பெரிய அளவில் உயர்ந்தது, அவரின்பலம். இந்த எளிமையான பின்னணியை கிண்டல்செய்வது, காங்கிரசின் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு, எந்த வகையிலும் உதவாது என்று கருத்து கூறியுள்ளார்.

Leave a Reply