இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி விவகாரத்தில் இந்தியா அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரதமராகிவிட்டால் அது அமெரிக்காவுக்கு மற்றொரு தலைவலியாகும் என்று டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், தேவ்யானி விவகாரத்திற்கு அடுத்தபடியாக இந்தியாசார்பில் அமெரிக்காவிற்கு அடுத்தடென்சன் மோடிக்கு விசா மறுக்கப்பட்டதுதான்; இந்தியாவில் பொதுத்தேர்தல் நெருங்குவதால் அமெரிக்காவிற்கான நெருக்கடியும் அதிகரித்துள்ளது; தேர்தலில் பாஜக., வெற்றிபெற்றால் மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர்;

2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தை காரணம் காட்டி அமெரிக்கா இதுவரை மோடிக்கு விசா அளிக்க மறுத்துவந்தது; வழக்கில் மோடிக்கு தொடர்பு இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் மோடி பிரதமராகிவிட்டால், அவர் குற்றமற்றவர் என கோர்ட் தீர்ப்பளித்த பின்னரும் அவருக்கு விசாவழங்காத அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும்; இது அமெரிக்காவிற்கு பெரும்சிக்கலை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply