தெலுங்கானா தனிமாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ஆந்திரமாநில, காங்கிரஸ் முதல்வர், கிரண்குமார்ரெட்டி, எந்த நேரத்திலும் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், தன் ஆதரவாளர்களுடன், காங்கிரசிலிருந்து விலகி, தனிக் கட்சி துவங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத வலுப்படுத்தும் விதத்தில் அந்த மாநில சமூகநலத்துறை அமைச்சர் பி. சத்யநாராயணாவின் கருத்து அமைந்துள்ளது. . இதுகுறித்து அவர் கூறியதாவது:

தொடர்ந்து நாங்கள் பதவியில் நீடிக்கவிரும்பவில்லை. 2013ஆம் ஆண்டு ஆந்திர மறுசீரமைப்பு மசோதா (தெலங்கானா மசோதா) மீதான விவாதம் சட்டப் பேரவையில் முடிவுபெற்றதும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமாசெய்ய தயாராக இருக்கிறோம்.

முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் தமதுபதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கூடும். ஐக்கிய ஆந்திரத்துக்காகப் பாடுபடும் ஒரு அரசியல்கட்சி வேண்டுமென்று, சீமாந்திரா பகுதியைச்சேர்ந்த மக்கள் விரும்புகின்றனர்.

அதே சமயம், இது வரை தனிக் கட்சி தொடங்கவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. ஆந்திர மறு சீரமைப்பு மசோதா மீது சட்டப் பேரவையில் விவாதம் நடத்தி திருப்பி அனுப்புவதற்கு, மேலும் 60 நாள் அவகாசம்வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கேட்க இருக்கிறோம் என்று சத்ய நாராயணா கூறினார்.

இதனிடையே, காங்கிரஸ்சில் இருந்து விலகி புதியகட்சியை தனது ஆதரவாளர்களுடன் கிரண்குமார்ரெட்டி எந்த நேரத்திலும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேகருத்தை வலியுறுத்தி சீமாந்திரா பகுதிகளில் பிரசாரமும் நடைபெற்று வருகிறது.

Leave a Reply