முஸ்லிம் மதகுரு மரணத்துக்கும், கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் பலியான சோக சம்பவத்துக்கும் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குஜராத் முதல்–மந்திரியும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி விடுத்துள்ள இரங்கல்செய்தியில் கூறி இருப்பதாவது:–

மும்பையில் முஸ்லிம் மதகுருவான சையத்னா முகமது புர்கானுதீன் மரணமடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை மிகச் சிறந்த மனிதராக நாம் என்றும் நினைத்து பார்க்கமுடியும். மக்கள் மனதில் அமைதியை நிலை நாட்டவும், முகத்தில் மகிழ்ச்சியை வெளிகொண்டு வரவும் ஆன்மிக பணியில் ஈடுபட்டார். மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டார்.

இதே போல அவரது வீட்டு அருகே நடந்த சோகசம்பவம் எதிர்பார்க்காத ஒன்று. கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

Leave a Reply