குமுதம் ரிபோர்ட்டர் மற்றும் ஜூனியர் விகடன் ஆகிய வார இதழ்கள் நடத்திய கருத்துகணிப்பு இது. தமிழகத்தில் மூன்றாவது அணியை பா ஜ க அமைக்க போவதாக பத்திரிக்கைகள் மற்றும் பலகட்சிகளும் ஆரூடம் சொல்லி வந்த நிலையில் இந்த கருத்துகணிப்பு பலபேரின் எண்ணத்தை ஓட்டு மொத்தமாக தூக்கி வாரி போட்டிருக்கிறது.

தமிழகத்தில் முதல் அணி அதி மு க தலைமையிலும்,இரண்டாவது அணி பா ஜ க கூட்டணியும் என்பதும்தானாம் அந்த ரிசல்ட்.இனிமேல் தமிழகத்தில் தி மு க தான் மூன்றாவது அணி.

தனிப்பட்ட கட்சிக்கான ஒட்டு சர்வேயில் பா ஜ க வுக்கு மட்டும் 17.8 சதவீத ஒட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்கிறது குமுதம் ரிப்பொர்ட் டரின் அதிரடி சர்வே.இது தி மு க வை விட ஏழு சதவீதமே குறைவு.இதுவரை தமிழகத்தில் 3ஆம் இடத்தில இருந்த விஜயகாந்த கட்சி பா ஜ க வை விட 10.5 சதவீதம் பின்னுக்கு போய் நான்காம் இடத்தில உள்ளதாம் (7.3) சதவீதம்.

படித்தவர்கள் மத்தியில் பா ஜ க, தி மு க வை பின்னுக்கு தள்ளி 24.1 சதவீதத்தோடு இரண்டாமிடத்தில் இருக்கிறது என்கிறது ரிப்போர்ட்டர்.ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களும்,ராமநாதபுரம் இஸ்லாமியர்கள் பலரும் மோடியை பிரதமராக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம் .

 பா ஜ க ,தே மு தி க ,ப ம க ,ம தி மு க கூட்டணி அமைந்தால் மொத்த 32.5 சதவீத வாக்குகளோடு அதி மு க வை விட வெறும் 0.6 சதவீத வாக்குகளை குறைவாக பெற்று தி மு க வை பலமடங்கு பின்னுக்கு தள்ளுகிறது பா ஜ க கூட்டணி என்கிறது நேற்றய ரிப்பொர்டெரின் அதிரடி சர்வே ரிசல்ட்.

எந்த கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 61.08 சதவீதம் பேர் பா ஜ க கூட்டணிக்கே என்று கூறி இருக்கிறார்கள் நம் தமிழக மக்கள்.இது அ தி மு க வை விட 40.03 சதவீதம் அதிகம் .அ தி மு க கூட்டணிக்கு வெறும் 21.5 சதவீதம் தானாம்.

மோடிதான் அடுத்த பிரதமர் என்று 65.8 சதவீத மக்களும்,தே மு தி க ,பா ஜ க ,ம தி மு க, ப ம க அணியே சிறந்தது என்று 47.2 சதவீதம் பேரும்,விஜயகாந்த பா ஜ க கூட்டணியில் தான் சேரவேண்டும் என்று 57.2 சதவீதம் நம் தமிழக பெருமக்கள் சொல்லி இருக்கிறார்கள் பலே பலே …..

போன சட்டமன்ற தேர்தலில் இந்த இரு பத்திரிக்கைகளுமே அ தி மு க வே தனிபெரும்பான்மயாக வெற்றி பெரும் என்று சர்வே வெயிட்டவை என்பதால் இந்த சர்வேயும் நிஜமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .

Leave a Reply