பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, சிறு வயதில் தான் ரெயில் மற்றும் பிளாட்பாரங்களில் டீவிற்றதாக கூறினார். டீ விற்றவர் தேசத்தின் பிரதமர் வேட்ப்பாளர் என்று பல கோடி மக்களும் , பாஜக.,வினரும் ஒரு பக்கம் பெருமை பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் மறுபக்கம் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியினரும் அலறித்தான் போயுள்ளனர் .

இந்நிலையில், வாக்காளர்களை கவரும் நடவடிக்கையாக பாஜக பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி ஓராயிரம் டீ கடைக் காரர்களை சந்திக்க இருப்பதாக பாஜக கூறியுள்ளது. இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் முதல் நாடுமுழுவதும் உள்ள 300 நகரங்களின் ஓராயிரம் டீ கடைக் காரர்களை இணையதளம் மற்றும் டிடிஎச். மூலம் நேரிடையாக தொடர்புகொண்டு உரையாடுகிறார். அப்போது அடிப்படைவிசயங்கள் குறித்தும் மோடி விவாதிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

Leave a Reply