சட்டத்தை பாதுகாக்க கடமை பூண்டவர்கள் தர்ணா போராட்டத்தில் வீதியில் இறங்கி போராடுவது வியப்புக்குரியது என பாஜக கருத்து தெரிவித்துள்ளது .

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், புகார்கூறப்பட்ட நான்கு காவல் துறையினருக்கு எதிராக உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுகோரி, தர்ணா போராட்டத்தில் வீதியில் இறங்கி ஈடுபடுவது, வியப்புக்குரியது. சட்டத்தை காக்கக் கடமை உள்ளதாக பதவியேற்புப் பிரமாணத்தின்போது கூறிய அரவிந்த் கேஜ்ரிவால், இவ்வாறு சட்டத்துக்கு புறம்பான செயலைச்செய்வது வியப்புக்கு உரியது. கடந்த 50 வருடங்களில் தில்லியில் இப்படி ஒருகாட்சியை நான் கண்டதில்லை என்று பாஜக தலைவர் வி.கே. மல்ஹோத்ரா கூறியுள்ளார்

Tags:

Leave a Reply