முதல்வருக்கான தகுதி, மரியாதை, மதிப்பு ஆகியவற்றைப்பற்றி எல்லாம் அரவிந்த் கேஜரிவால் உணர்ந்துள்ளாரா? , ஆட்சிக்குவந்த பிறகும், “ஆம் ஆத்மி’ கட்சி வீதியில் இறங்கி போராடுவதை பார்க்கும் போது, அக்கட்சிக்காக வாக்களித்தவர்களை எண்ணி வருந்துகிறேன் என்று சமூக ஆர்வலரும் முன்னாள் ஐ.பி.எஸ் பெண் அதிகாரியுமான கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியின் தர்னா குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தில்லியில் ஆம் ஆத்மிக்கு ஏன் தான் வாக்களித்தோம் என்று வாக்காளர்கள் கவலைகொள்ளும் வகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் செயல்பாடு அமைந்துள்ளது. பிரதேச முதல்வரானபிறகும் அவரால் வீதிக்குவந்து போராடித் தான் கோரிக்கையை வலியுறுத்த முடிகிறது.

இதைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. தில்லி வாக்காளர்களை நினைத்து வருத்தப்படமட்டுமே முடிகிறது. முதல்வருக்கான தகுதி, மரியாதை, மதிப்பு ஆகியவற்றைப்பற்றி எல்லாம் அரவிந்த் கேஜரிவால் உணர்ந்துள்ளாரா? என்ற கேள்வியும் எனக்கு எழுகிறது. அவரதுநோக்கம் சரியாக இருந்தாலும் அவருடைய பாதை மிக ஆபத்தானது. முதல்வருக்குரிய பொறுப்புடன் கேஜரிவால் நடந்துகொள்ள வேண்டும் என நானும் தில்லி வாக்காளர்களும் எதிர்பார்க்கிறோம்’ என்றார் கிரண் பேடி.

Leave a Reply