பாராளுமன்ற தேர்தல்முடிவு எப்படி இருக்கும் என்று மாநில வாரியாக ஐபிஎன். தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது .

இதில் பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஓடிசா ஆகிய 4 மாநில கருத்துகணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

பீகார், ஜார்க்கண்ட் ஆகிய இருமாநிலங்களிலும் பாஜக. அதிக இடங்களில் வெற்றிபெற்று மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் 34 இடங்களில் அதாவது பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக. வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கு 7 முதல் 13 இடங்களே கிடைக்கும என்று தெரியவருகிறது.

லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிக்கு 6 முதல் 10 இடங்களும். காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாஜக.வுக்கு அதிக இடம்கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 28 இடங்கள்வரை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும். 7 முதல் 13 இடங்கள் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவருகிறது.

மாநிலங்களில் மாறுபட்டமுடிவுகள் வெளியான போதும் சிறந்த பிரதமர் ஆக பெரும்பாலனவார்கள் நரேந்திர மோடியையே தேர்வு செய்துள்ளனர்.

Leave a Reply