வண்டலூரில் உள்ள விஜிபி. திடலில் அடுத்தமாதம் 8-ந் தேதி பாஜக. சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு பேசுகிறார். இந்தமாநாட்டில் லட்சக் கணக்கானோர் கலந்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப் படுகிறது அதற்கான வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாடு நடைபெறும் திடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றை மாவட்ட எஸ்பி. விஜயகுமார் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்து ஆய்வுசெய்தனர்.அப்போது கட்சியின் நிர்வாகிகளிடம் எஸ்.பி.விஜயகுமார் விவரங்களை கேட்டறிந்தார்.

Leave a Reply