குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசியதால் நடிகர் சல்மான் கானுக்கு ஒரு சில அடிப்படை வாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன . இந்நிலையில் அதை பற்றி கண்டுகொள்ளாத நடிகர் சல்மான் கான் மீண்டும் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் . தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–

2002–ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கும், முதல்மந்திரி நரேந்திர மோடிக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கலவரத்துக்கு அவர் தான் பொறுப்பு என்றால் நீதிமன்றம் எப்படி அவரை விடுவிக்கும்?

கலவரத்தக்கு அவர் காரணமல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டபிறகு அவர் ஏன் மன்னிப்புகேட்க வேண்டும்? இதற்காக மோடி மன்னிப்புகேட்க தேவை இல்லை.

குஜராத்துக்கு நான் சமீபத்தில் என் படத்துக்காகத் தான் சென்றேன். மோடிக்கு ஆதரவுசொல்ல செல்லவில்லை. மோடி மிகவும் நாகரீகமானவர். அவர் பேசியது என்னை கவர்ந்தது. குஜராத்தை அவர் மேம்படுத்தி இருக்கும் விதம் என்னை மிகவும் ஈர்த்தது என்று நடிகர் சல்மான்கான் கூறினார்.

Leave a Reply