காவல் துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என தர்ணாபோராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பைத்தியக்கார முதல்வர் என்று மத்திய உள்துறைஅமைச்சர் ஷிண்டே சாடியுள்ளார்.

காவல் துறையை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து மாநிலஅரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிமுதல்வர் கெஜ்ரிவால் இரு நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில் காவல்துறையை அவரது அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என போராட்டம் நடத்திய கெஜ்ரிவால் ஒரு பைத்திய கார முதல்வர் .இந்த பைத்தியகார முதல்வரின் போராட்டத்தால் ஏற்படும்பிரச்சனையை சமாளிக்கவும், பாதுகாப்பிற்காகவும், விடுப்பில்சென்ற போலீசாரின் விடுமுறையை ரத்துசெய்ததாகவும் ஷிண்டே கூறினார்.

Leave a Reply