கோரக்பூரில் நரேந்திரமோடி பேசும் மைதானம் அருகே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், சந்தேகிக்கும்வகையில் நின்ற முனிலால் (50), திலக்தாரி (48) ஆகியோரை பிடித்து சோதனைசெய்தனர். அவர்களிடம் இரண்டுகத்திகள் இருந்தன.

இதையடுத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டு அருகில் உள்ள சிதுவாதால் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. ஆயுததடை சட்டத்தின்கீழ் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மோடிபேசிய கூட்டத்தில் கத்தியுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்ட தகவல் பரவியதும், சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Leave a Reply