பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் மணிசங்கர் அய்யருக்கு நாவடக்கம்தேவை சோனியாவின் கடந்தகாலத்தை விமர்சிக்கும் தைரியம் அவருக்கு உண்டா என்று என தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது; தமிழகத்தில் நாளுக்கு நாள் பாஜக கூட்டணிக்கு மக்கள்மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது. நரேந்திர மோடி பிப். 8-ம்தேதி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். மக்களவை தேர்தலில் இந்தமுறை தமிழகமக்கள், தேசிய கட்சியை தேர்வு செய்யும்காலம் நெருங்கி விட்டது.

நரேந்திர மோடியை மணிசங்கர் அய்யர் விமர்சித்தவிதம் கண்டிக்கத்தக்கது. இதேபோன்று, மீண்டும் பேசினால் பாஜக தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாகநேரிடும். அவருக்கு நாவடக்கம் தேவை. சோனியாவின் கடந்தகாலத்தை விமர்சிக்கும் தைரியம் அவருக்கு உண்டா என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply