இலங்கைத் தமிழர்களைக் கொன்றுகுவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணைபோன கட்சிகளுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், வியாழக் கிழமை காலை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்துக்கு வந்தனர். அவர்களை வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது : பிப்ரவரி 8-ம்தேதி மோடி பங்கேற்கவுள்ள சென்னை பொதுக்கூட்டத்தில் வைகோவும் ம.தி.மு.க.,வினரும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.

எங்கள்கூட்டணி தமிழகத்தில் முதல் அணியாக உள்ளது. வரலாறுகாணாத ஊழல், மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கான வாழ்வுரிமைமறுப்பு போன்ற பல்வேறு துரோகங்கள்செய்த காங்கிரஸ் கட்சியை இந்தத் தேர்தலில் வீழ்த்துவோம்.

தே.மு.தி.க.,வின் 2-ம்கட்ட தலைவர்களிடம் கூட்டணிகுறித்து பேசி வருகிறோம். இலங்கை தமிழர்களை கொன்றுகுவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணைபோன கட்சிகளுடன் விஜயகாந்த் சேரமாட்டார் என்றார்.

Leave a Reply