டெல்லியில் தடை உத்தரவைமீறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுதொடர்பாக முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, கிர்கி பகுதியில் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத்பார்தி நடத்திய சோதனை மற்றும் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டம் தொடர்பாக காவல் துறை ஆணையரிடம் டெல்லி பாஜக மூத்த தலைவர் விஜய்கோயல் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், கெஜ்ரிவால்மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தர்ணாபோராட்டம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்களை கடமை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Leave a Reply