கடந்த 2005ம் ஆண்டுக்குமுன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வரும் மார்ச் 31ம்தேதிக்குள் வங்கியில் கொடுத்துவிட்டு புதியகரன்சி நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடந்தவாரம் உத்தரவிட்டது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் மீனாட்சிலேக்கி கூறியதாவது:

வெளிநாடுகளில் பதுக்கப் பட்டிருக்கும் கருப்புபணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இதனை திசைதிருப்பும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏழைமக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். வங்கிகணக்கு இல்லாத, படிப்பு அறிவு இல்லாத ஏழைகள் இந்ததிட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

வீடுகளில் சிறிதுசிறிதாக சேர்த்து வைத்திருக்கும் அப்பாவிமக்கள் குறி வைக்கப்படுவார்கள். இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம்பேருக்கு வங்கிகணக்கு இல்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பு அறிவில்லாதவர்கள், ஏழைகள், வயதானவர்கள், தொலைதூரங்களில் வசிப்பவர்கள். ரூபாய் நோட்டுகளை மாற்றி தருகிறோம் என கூறி இடைத் தரகர்களால் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளது. இந்ததிட்டம் அமெரிக்க டாலர்களாகவும், இதர அன்னிய கரன்சிகளாகவும் குவித்து வைத்திருப்பவர்களை பாதிக்காது. என்று கூறினார்.

Leave a Reply