தே.மு.தி.க-பா.ஜ.க கூட்டணி அமைந்தால் அது இயற்கையான கூட்டணியாக இருக்கும் . தமிழகத்தில் பிப்ரவரி 8-ம்தேதிக்குள் கூட்டணிகள் முடிவாகி விடும். அதன் பிறகு மக்கள்மனதில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி முன்னிலைபெறும். என தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

குமரிமாவட்டம், திற்பரப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ம.தி.மு.க.,வுடன் பா.ஜ.க கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. தொகுதிப்பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தே.மு.தி.க.,வுடன் கூட்டணி உறுதியாக அமையும் என நம்புகிறேன். அக்கட்சி நடத்தவுள்ள மாநாடு ஊழல் எதிர்ப்புமாநாடாகும். ஊழலை எதிர்த்து மாநாடுநடத்தும் விஜயகாந்த், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முடியாது.

தேமுதிக-பாஜக கூட்டணி அமைந்தால் அது இயற்கையான கூட்டணியாக இருக்கும். தமிழகத்தில் பிப்ரவரி 8-ம்தேதிக்குள் கூட்டணிகள் முடிவாகிவிடும். அதன்பிறகு மக்கள்மனதில் பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை பெறும்.

தற்போது தமிழகமெங்கும் பா.ஜ.க கேந்திரிய தலைவர்களுக்கு பயிற்சிமுகாம்கள் நடத்தி வருகிறோம். இதில் வாக்காளர்களிடம் அணுகவேண்டிய முறைகள், நரேந்திரமோடியின் திறமை மற்றும் சாதனைகள், பாஜகவின் வளர்ச்சி, ஏனைய கட்சிகளின் தவறுகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாம்கள் ஜனவரி 30-ம்தேதி வரை நடைபெறும்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையால் தாக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்படுவதைத் தடுக்கும்வகையில் ஜனவரி 31-ம்தேதி, கடல் தாமரைபோராட்டம் நடத்தவுள்ளோம். இதில் ஒருலட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் கடல்வழியாக பாம்பன் சென்று போராட்டம் நடத்துவோம்.

கன்னியா குமரி தற்போது புறக்கணிக்கப்பட்ட மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் முதல் நிலையில் இருந்துவந்த கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது சீரழிந்தநிலையில் உள்ளது. சாலைகள் எந்தக் காலத்திலும் இல்லாதவகையில் சேதமடைந்துள்ளன.

தனியார் காடுகள் பாதுகாப்புசட்டத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளைக் காது கொடுத்து கேட்க அரசு மறுத்துவருகிறது. இந்நிலை தொடருமானால் பா.ஜ.க தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

Leave a Reply