‘நான் அல்ல நாம்’ என்ற காங்கிரஸ்கட்சியின் விளம்பரம் அக்கட்சிக்கு தொடர்பில்லாத ஒன்று, நான் என்ற கொள்கை காங்கிரஸ் கட்சிக்கும் , நாம் என்ற கொள்கை பாஜகவுக்கும் பொருந்தும் என்று பா.ஜ.க விமர்சித்துள்ளது.

‘நான் அல்ல நாம்’ என்ற செய்தித்தாள் விளம்பரத்தில், ராகுல்காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி செய்தி வெளியிட்டுள்ளது. நாடுமுழுவதும் அனைத்து தினசரிகளிலும் வந்த காங்கிரஸ்கட்சியின் விளம்பரத்தை பா.ஜ.க கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த விளம்பரத்திலுள்ள நான் என்ற ஒருவார்த்தை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு பொருந்தும் என்று கூறியுள்ள பாஜக செய்திதொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், போஸ்டர் மூலம் மக்களை ஏமாற்றமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தவிளம்பரம் மோசடியான ஒன்று என்றும், பா.ஜ.க மூலம் ஏற்கனவே வெளிவந்த விளம்பரத்தை காங்கிரஸ் கட்சி மீண்டும் பயன்படுத்தியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். நான் என்ற கொள்கை காங்கிரஸ் கட்சிக்கும் , நாம் என்ற கொள்கை பாஜகவுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply