மத்தியில் நிலையான ஆட்சி அமையவேண்டும் என்ற குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் கருத்தை பாஜக வரவேற்றுள்ளது.

டெல்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த பின் பேசிய ராஜ்நாத்சிங் இதனை தெரிவித்தார். கவர்ச்சி அரசியல் நல்லநிர்வாகத்திற்கு ஈடாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறை உள்ளிட்டவற்றில் நாடு பல்வேறுசவால்களை எதிர்கொண்டுள்ளதாக ராஜ்நாத்சிங் கூறினார். கவர்ச்சி அரசியல்பற்றி குடியரசுத்தலைவர் தெரிவித்த கருத்தை பாஜக மூத்த தலைவர் அத்வானியும் வரவேற்றுள்ளார்

Leave a Reply