பல ஆண்டுகால அரசியல் அனுபவப்படி சொல்கிறேன். நாடு முழுவதும் வீசும் மோடி அலையால், வரும்தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது; சென்னையில் வருங்கால பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் வெற்றிபெற ம.தி.மு.க சார்பில் அனைத்து உதவிகளும், ஒருங்கிணைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட ஒருகட்சியால் கமலாலயம் தாக்கப்பட்டபோது, ம.தி.மு.க, தொண்டர்கள் கமலாலயம்வந்து, பாஜக நிர்வாகிகளுடன் பேசினர்.

எனது பல ஆண்டுகால அரசியல் அனுபவப்படி சொல்கிறேன். நாடு முழுவதும் வீசும் மோடி அலையால், வரும்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெறும். பாஜக தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றாலும், அந்த அரசில் கூட்டணிக்கட்சிகள் இடம்பெறும் என்று, பாஜக மேலிடத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி, பலரது கணக்குகளையெல்லாம் முறியடித்து, பெரும் வெற்றி பெறும்" என்றார்.

Leave a Reply