தமிழகத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.,விற்கு சவாலாக பாஜக தலைமையிலான கூட்டணி அமையும் என பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அல்லாத மாற்று கட்சிகளுடன் பேசி புதியகூட்டணியை உருவாக்க முயன்றுவருகிறோம். இதற்காக மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, பாட்டாளி மக்கள்கட்சி, கொங்குநாடு முன்னேற்ற கழகம், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

சென்னை வண்டலூரில் பிப்ரவரி 8ஆம்தேதி நடைபெறும் பாஜக கூட்டத்தில், பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி கலந்துகொள்கிறார். வைகோ உள்பட கூட்டணிகட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் பா.ஜ.க கேந்திரகூட்டங்கள் நடத்தி, தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளோம். அதில், தாருங்கள் உங்கள் ஓட்டுதாமரைக்கு என வீடுதோறும் பிரசாரம்செய்ய உள்ளோம். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தேர்தல்மாநாடு நடைபெற உள்ளது.

மோடி பிரதமரானால் மதச்சார்பற்ற தேசவளர்ச்சி ஆட்சி ஏற்படும். கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். கச்சத் தீவை ஒட்டியுள்ள மீன்பிடிபகுதியை இந்திய, இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் பொதுபகுதியாக அறிவிக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் குறித்து இலங்கை அரசுடன் இந்தியா பேசவேண்டும் என்றார்.

Leave a Reply