சீனாவுடன் 1961ல் நடைபெற்ற போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக. லதாமங்கேஷ்கர் பாடிய பாடலின் 51வது ஆண்டு நிறைவை ஒட்டி மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி, தேசபக்தி பாடல்களுட்ன தொடங்கியது . மோடியும் லதாவும் மேடைக்குவந்ததும், தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர். 26/ 11ல் நடைபெற்ற மும்பைதாக்குதலில் போராடி உயிர்நீத்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும் மோடி பாராட்டுதெரிவித்தார். எல்லையில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கும், அவர்களை தியாகம்செய்ய அனுப்பிய அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இந்நிகழ்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் போது லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து, மோடியும் அந்தபாடலை கண்ணீர் விட்டபடியே பாடினார். நரேந்திர மோடி நிகழ்த்திய உரை வருமாறு: நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களுக்காக காஙகிரஸ் அரசு, ஒரு போர்நினைவுச் சின்னத்தை இது வரை ஏற்படுத்தவில்லை. அந்த நல்லபணியை எனக்காக அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள் போலும்.

போரில் உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை கவுரவிப்பதற்காக அமைக்கப்படும் நினைவுச்சின்னம் இல்லாத ஒரேநாடு இந்தியாதான் என்பது வேதனையான விஷயம். தற்போதைய நிலையில், அடுத்துவரும் பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு நல்லவாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. ( அப்போது கூட்டத்தினர், மோடியைக்கொண்டு வாருங்கள்; நாட்டைக் காப்பாற்றுங்கள் என் முழங்கினர்).

கவிபிரதீ்ப் எழுதிய இந்த பாடலை, சி.ராமச்சந்திரா இசையமைக்க, 1963, ஜனவரி 27ம்தேதி அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னிலையில் லதாமங்கேஷ்கர் பாடினார். லதா மங்கேஷ்கர் தற்போது கடந்த காலத்தை நம்முடன் இணைத்துள்ளார். நேரு முதலில் கேட்டபாடலை நாமும் இப்போது கேட்பது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.

ஒரு ராணுவசக்தியாக விளங்கும் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறது; இந்தியா முடிவுசெய்தால், சரியான தலைமையும், கொள்கைகளும் இருந்தால், 10 ஆண்டுகளில் இந்தியா இதரநாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதிசெய்யும். போர் வீரர்களையும் தியாகிகளின் குடும்பத்தினரையும் கவுரவிப்பதென்பது, நாட்டிற்காக சுயநலம் இல்லாமல் தியாகம்செய்த அனைவரையும் கவுரவிப்பதாகும் என்றார்.

ஆயுதப்படை வீரர்களே பெருமளவில்பங்கேற்ற இந்த நிகழ்வில், அவர்களுக்காக மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பரவியுள்ள படை வீரர்களுக்காகவும் மோடி பேசினார். போர் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும் உறுதி கூறினார்,

Leave a Reply