குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தாவூதிபோரா சமூகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செய்யத்னா முஃபத்தால் சைபுதீனை சந்தித்து வாழ்த்துதெரிவித்தார்.

நரேந்திர மோடி தாவூதி போரா சமூகத்தின் புதியதலைவராக நியமிக்கப்பட்டுள்ள செய்யத்னா முஃபத்தால் சைபுதீனை மும்பையில் சந்தித்துபேசினார். அப்போது அவர் போரா சமூகத்தின் முன்னாள் தலைவரும், சைபுதீனின் தந்தையுமான டாக்டர் செய்யத்னாமுகமது புர்ஹானுதீனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

மேலும் தனக்கும் மறைந்த தலைவருக்கும் இடையேயான உறவை மோடி நினைவுகூர்ந்தார். அந்த சந்திப்பின் போது மோடியின் தலைமை தகுதிகளை புகழ்ந்த செய்யத்னா அவர் இந்தியாவை மிகவும் உயர்ந்தஇடத்திற்கு கொண்டு செல்ல வாழ்த்தினார். அப்போது பாஜக மகாராஷ்டிரா மாநில தலைவர் தேவேந்திர பதன்விஸ், மூத்த தலைவர்கள் விஜய்ருபானி மற்றும் கோபிநாத் முன்டே ஆகியோர் மோடியுடன் இருந்தனர்.

Leave a Reply