ஊழல் எதிர்ப்புமாநாடு நடத்தும் தேமுதிக, ஊழல்வாத கட்சிகளுடன் கூட்டணிவைக்காது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். .

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அந்தமான் படகுவிபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பாஜக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.

பலியானவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் வழங்கவேண்டும். இது போன்ற சோக சம்பவங்களைத் தடுக்க, படகுகள் உட்பட அரசுவாகனங்கள் அனைத்தையும் அடிக்கடி சோதிக்கவேண்டும்.

சென்னையில் நடந்த இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையேயான பேச்சு வார்த்தையில் சுமுகமுடிவு எட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் பேச்சு வார்த்தையில் என்ன நடந்தது என்பது இலை மறை காயாகவே உள்ளது. இதைவைத்து பார்க்கையில் அந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டதாக தெரியவில்லை.மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி வரும் 31ந்தேதி பாம்பனில் கடற் தாமரை போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். ஒருலட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்

ஊழல் எதிர்ப்புமாநாட்டை நடத்தவிருக்கும் தேமுதிக, ஊழல் வாத காங்கிரஸ் மற்றும் திமுக.,வுடன் கூட்டணிவைப்பது சாத்தியமில்லை. தேமுதிக மற்றும் பாமக., வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிப்ரவரி 8ம் தேதி நரேந்திரமோடி பங்கேற்கும் மாநாட்டத்தில் வைகோ, பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தவிர கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்ததும் மற்ற கட்சித் தலைவர்களும் அந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். பாஜக.,வின் தாழ்த்தப்பட்டவர் அணி சார்பில் மதுரையில் வருகிற 21-ம்தேதி சமூகநீதி மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளோம்.என்று அவர் கூறினார்.

Leave a Reply