தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அரசுமீது கூறப்பட்ட ஊழல் புகார் குறித்து தற்போதைய முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நிலைப்பாட்டை விளக்கவேண்டும்? என பிரதேச பா.ஜ.க முன்னாள் தலைவர் விஜேந்தர்குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது : தில்லி முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித், அவரது அமைச்சரவை சகாக்கள் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய ஊழல் தடுப்புபிரிவின் சிறப்பு நீதிபதி நரோத்தம் கெüசல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம்தேதி அனுமதி அளித்தார். இந்த அனுமதிக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் தடைவிதிக்கக் கோரி ஷீலா தீட்சித் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி அரசும் ஷீலா தீட்சித்தை பாதுகாக்க முயன்றுவருகிறது. ஷீலா தீட்சித்துடன் குற்றச்சாட்டுக்கு ஆளான உதய்சகாய்க்கும் ஆம் ஆத்மியில் உயர்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தில்லி பா.ஜ.க சட்டப்பிரிவு பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை புதன் கிழமை (ஜன. 29) சந்திக்க உள்ளேன் என்றார் விஜேந்தர்குப்தா.

Leave a Reply