1984ஆம் ஆண்டு சீக்கிய படுகொலை குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் நவ் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, சீக்கியர் படுகொலை வேறு- குஜராத்படுகொலை வேறு. குஜராத் படுகொலையை அம்மாநில அரசு நிகழ்த்தியது. சீக்கிய படுகொலையை ராஜிவ் அரசு தடுக்கமுயற்சித்தது என்று கூறியிருந்தார்.

இதை நிராகரித்து பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கூறியுள்ளதாவது: 1984 ஆண்டு சீக்கியர் கொலையில் ராஜிவ் அரசு பங்கெடுக்கவில்லை என்று எப்படித் தான் ராகுல்காந்தி சொல்கிறாரோ? 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதியன்று இந்திரவின் உடல் வைக்கப் பட்டிருந்த எய்எம்ஸ் மருத்துவ மனையில் இருந்து வன்முறைவெடித்தது..

காங்கிரஸ் தலைவர்களே வன்முறைக்கு தலைமைதாங்கினர். ஆயிரக் கணக்கான இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்த ஒருஇடத்திலும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. எவர்மீதும் வழக்குப் பதிவு செய்ய வில்லை. ஆனால் 2002 குஜராத் கலவரத்தின்போது ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கலவரக் காரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நூற்றுக் கணக்கானோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்படியான நிலையில் குஜராத் அரசுதான் 2002ஆம் ஆண்டு வன்முறையை நிகழ்த்தியது என்று எப்படி சொல்லலாம்? ஊழல் விவகாரத்தில் சமரசம போக்கைதான் ராகுல் வெளிப்படுத்தியிருக்கிறார். வாரிசு அரசியலை எதிர்க்கிறேன் என்கிறார் ராகுல். ஒன்றுமட்டும் நிச்சயம் இந்தியா.. ராகுல் மீது நம்பிக்கைவைத்து எதையும் எதிர்பார்க்கவில்லை என்றார்,

Leave a Reply