சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திடம், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்போம். அவரும் தருவார் என மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

சேலத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தை தேர்தல் சமயத்தில் சந்தித்து மோடிக்கு ஆதரவுகோருவோம். அவர் நிச்சயம் ஆதரவுகொடுப்பார்.

தேமுதிகவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் வருவதற்கான சாதகமானசூழல்கள் பிரகாசமாக உள்ளன. தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைப்போம். இங்கு 16 சதவீத அளவுக்கு ஆதரவு காணப்படுகிறது. எனவே இதைபலப்படுத்த முயற்சிக்கிறோம் என்றார்.

Leave a Reply