நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம் என தேசியமாநாடு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா கருத்து கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் தேசியமாநாடு கட்சியும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. அங்கு தேசிய மாநாடுகட்சி சார்பில் உமர் அப்துல்லா முதல்-மந்திரியாக உள்ளார். மேலும் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் புதுப்பிக்கவல்ல எரி சக்தி துறை மந்திரியாக பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம் என மத்தியமந்திரி பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், இந்தியாவை போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் பொது மக்கள் தான் பிரதமரை முடிவுசெய்வர். அதன்படி நரேந்திர மோடியை பிரதமராக மக்கள் தேர்வுசெய்தால், அது அவர்களது விருப்பம். அவ்வாறு நரேந்திரமோடி பிரதமரானால் அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதுகுறித்து தனது மகனும், காஷ்மீர் மாநில முதல்&மந்திரியுமான உமர் அப்துல்லா முடிவுசெய்வார் என்று கூறினார்.

Leave a Reply