மக்களவைத் தேர்தல்கூட்டணி தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை, தமிழக பாஜக தலைவர்கள் புதன்கிழமை சந்தித்துப்பேசினர்.

வரும் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மாற்றாக வலுவானகூட்டணி அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

இந்நிலையில் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை, தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னையில் புதன் கிழமை சந்தித்துப்பேசினார்.

அப்போது பாமக தலைவர் ஜிகே. மணி, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். மோகன் ராஜூலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொகுதிப்பங்கீடு தொடர்பாக இருதரப்பிலும் நீண்டநேரம் ஆலோசனை நடைபெற்றதாகவும், முடிவு எட்டப்பட்டபிறகு முறையான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply