காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலோடு ஒப்பிடுகையில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி பல வழிகளில் மேலானவர் என புகழ்ந்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திரிபாதி.

காங்கிரசுடனான கூட்டணி உறவை முறித்துக்கொள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாகவும், அக்கட்சியின் பார்வை பாஜக.,வின் மீது விழுந்திருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் தெரிவித்துவருகின்றன. அதன்படி, சமீபத்தில் அக்கட்சி தலைவர் சரத் பவார் மோடியை ரகசியமாகச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்தசெய்தியை மறுக்கும் வகையில், ‘கடந்த ஓராண்டில் நான் மோடியை சந்தித்தே இல்லை’ என்று பவார் கூறியுள்ளார். இந்நிலையில் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவரான திரிபாதி. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- ‘குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி மூன்றுமுறை பதவி வகித்துள்ளார். இதனால் அவருக்கு அனுபவம் அதிகம். ராகுலுக்கு இது போன்ற அரசியல் அனுபவங்கள் குறைவு. மேலும், 1984ம் ஆண்டு கலவரம்குறி்த்த ராகுலின் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply