ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தமிழகமீனவர் உரிமைகாக்கும் வகையில் பாஜக சார்பில் ''கடல் தாமரை'' என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றது.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியதாவது:–

தமிழகத்தில் பாஜக, தேமுதிக. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான அனைத்து பேச்சு வார்த்தைகளும் தொடங்கி உள்ளன. இதற்காக சிலநண்பர்கள் இணைப்புபாலமாக இருந்து வருகிறார்கள். விஜயகாந்த் ஊழல் எதிர்ப்புமாநாடு நடத்துகிறார். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் அவர் திமுக.வுடனோ, அதிமுக.வுடனோ கூட்டணிவைக்க வாய்ப்பு இல்லை. தேசிய அளவில் ஊழலை எதிர்த்துவரும் இயக்கமாக பாஜக திகழ்கிறது. எனவே இன்னும் ஓரிருநாட்களில் தேமுதிக.வுடன் பேச்சுவார்த்தை முடிவடையும் என்று நம்புகிறேன்.

வருகிற 8–ந் தேதி பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சென்னை வருகிறார். அப்போது அவரது முன்னிலையில் பா.ஜ.க, தே.மு.தி.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

Leave a Reply