பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பிலஹரி, தொலைக் காட்சி நடிகை ஆஷிமாசர்மா உள்ளிட்டோர் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் கட்சியில் இணைந்தனர்.

“டிஸ்கோ டான்சர்’ உள்ளிட்ட பல்வேறு ஹிந்தி படங்களுக்கும், கேங்லீடர் உள்ளிட்ட தெலுங்குப் படங்களுக்கும் இசை அமைத்தவர் பப்பிலஹரி.

தில்லியில் பாஜக தலைமையகத்தில் ராஜ்நாத்சிங் முன்னிலையில் அவர் வெள்ளிக்கிழமை கட்சியில் இணைந்தார். அவரிடம், “கடந்த காலத்தில் காங்கிரûஸ ஆதரித்துப் பிரசாரம்செய்த நீங்கள் தற்போது பாஜகவில் சேர்ந்தது ஏன்?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, “”பத்து ஆண்டுகளுக்குமுன் காங்கிரஸ்க்கு ஆதரவாக அலைவீசியது. அந்த அலை இப்போது மாறியுள்ளது. அது இப்போது பாஜக பக்கம்வீசுகிறது” என்று பப்பிலஹரி பதிலளித்தார்.

Leave a Reply