காங்கிரஸ் என்ற கப்பல் மூழ்குகிறது. அதனுடைய அரசியல்நண்பர்கள் அனைவரும் காங்கிரஸை தவிக்க விட்டு விட்டுச் சென்றுவிட்டனர்.தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்திக்துப் பேசியதே இதற்குபோதுமான ஆதாரமாகும். இதை சரத்பவார் மறுத்துள்ளார். ஆனாலும் மோடியை அவர் சந்தித்தது உண்மை. காங்கிரஸ் கப்பலை காப்பாற்ற எவரும் இல்லை என பாஜக. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். .

காங்கிரஸைப் பொறுத்த வரையில் மன்மோகன் சிங் கடந்த காலத்தவர். ராகுல்காந்தி தோல்வி கண்டவர். காங்கிரஸ் கட்சியில் ஒரேகுழப்பம் தான் நிலவுகிறது. அதனுடைய ஆதரவுகட்சிகள் அனைத்தும் வேறு கூட்டணிக்கு சென்றுவிட்டன. இந்தகப்பல் மூழ்குகிறது. அதன் ஆதரவு கட்சிகளான தேசிய மாநாடு, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் காங்கிரஸை விட்டுவிலகும் நிலையில் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்திக்துப் பேசியதே இதற்குபோதுமான ஆதாரமாகும். இதை சரத்பவார் மறுத்துள்ளார். ஆனாலும் மோடியை அவர் சந்தித்தது உண்மை.

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ்கட்சி தங்களுக்கு அதிக இடம்வேண்டும் என்று கேட்டுவருகிறது. இதுதான் உண்மை. காங்கிரஸில் கருத்துவேறுபாடு உள்ளது. இதை அவர்கள் வெளியே சொல்லவில்லை. இதில் தவறு இருக்க முடியாது. அங்கிருந்து ஆதரவுகட்சிகள் வெளியேறுவதற்கு இது அச்சாரமாகும். தற்போது, காங்கிரஸிலோ, அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலோ யார் உள்ளனர். எவருமே இல்லை.

சிதம்பரம் பாஜகவை பற்றி கேள்விகேச்கிறார். அங்கு காங்கிரஸ் கட்சியில் என்ன வாழ்திறதாம். காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த மாயாவதி. முலாயம் சிங் ஆகியோர் அவர்களுக்கு ஆதரவு தர முன் வரவில்லை. இதை அவர்கள் நேரடியாகவே தெரிவித்துள்ளனர். திமுக. ஏற்கெனவே காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிவிட்டது. இன்னும் யார் விலகவேண்டும். காங்கிரஸை ஆதரித்த அத்தனை கட்சிகளும் அதை விட்டு விலகிவிட்டன. அவர்களது கூட்டணியில் எவருமே இல்லை. காங்கிரஸ் என்ற கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று ரவிசங்கர்பிரசாத் கூறினார்.

Leave a Reply