பா.ஜ.க பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமராவது உறுதி நாட்டைவிற்கும் காங்கிரஸ் தலைவர்களைக் காட்டிலும், தேநீர்விற்கும் நரேந்திர மோடி தான் நாட்டுக்குத் தேவை. மோடியின் ஆரம்பகட்ட வாழ்க்கையில் எங்களுக்கு பெருமைதான். என, பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார் .

மோடி தேநீர் விற்றவர் எனும் காங்கிரஸின் விமர்சனத்துக்கு பதிலடிகொடுக்கும் விதமாக , பெங்களூரு காந்திநகரில் சனிக்கிழமை தேநீர்விற்பனை செய்யும் பிரசாரத்தை தொடக்கி வைத்து அவர் பேசியதாவது:

மானியத்துடன் கூடியசமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் விவகாரத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லியின் செயல்பாடுகள் முரண்பாடான ஆட்சி நடை பெறுவதையே காட்டுகிறது.

நரேந்திரமோடியை பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ் கட்சியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால், பா.ஜ.க மீது காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்கமுடியாது.

நாட்டைவிற்கும் காங்கிரஸ் தலைவர்களைக் காட்டிலும், தேநீர்விற்கும் நரேந்திர மோடி தான் நாட்டுக்குத் தேவை. மோடியின் ஆரம்பகட்ட வாழ்க்கையில் எங்களுக்கு பெருமைதான். மாநில கட்சிகளால் நிலையான, வலிமையான ஆட்சியை அளிக்க இயலாது. மூன்றாவது அணியில் உள்ள அனைவரும் தலைவர்நிலையிலே உள்ளதால், நான்காவது அணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.வருகிற 4-ஆம்தேதி முதல் கர்நாடகத்தில் தொகுதிவாரியான மாநாடுகள் நடத்தப்படும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply