சமூக நலனுக்காக இளைஞர்கள் பாடுபட வேண்டும் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமைபோன்ற பிரச்னைகள் முற்றிலும் தீர்க்கப்பட வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நடைபெற்ற கல்லூரிவிழாவில் சனிக்கிழமை அவர் மேலும் பேசியதாவது: அண்மைக் காலமாக சமூக தீமைகளும், பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. அவற்றை இளைஞர்கள் உற்றுநோக்கி களைவதுடன், சமூக நலனுக்காகவும் பாடுபடவேண்டும். நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமைபோன்ற பிரச்னைகள் முற்றிலும் தீர்க்கப்பட வேண்டும்.

நான் கடந்த 1952ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற தேர்தலைப் பார்த்துவருகிறேன். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அரசியல்கறை படிந்து காணப்படுகிறது. நாட்டுக்கு புகழ்சேர்த்த சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை மாணவர்கள் வழி காட்டியாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும் என்றார் அத்வானி.

Leave a Reply