நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு குஜராத் கலவரத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை தொடர்புபடுத்தி விமர்சிக்கக் கூடாது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஃபுல்படேல் இதேகருத்தை வலியுறுத்தியிருந்தார். தற்போது சரத்பவாரும் அதை ஆமோதித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பாக மோடியை, சரத்பவார் ரகசியமாக சந்தித்ததாக செய்திவெளியானது. இதை மறுத்து வந்தசரத் பவார், தற்போது மோடிக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply