உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தே.மு.தி.க தனித்து போட்டியிடலாம் என்று தொண்டர்கள் தெரிவித்திருப்பதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறினாலும் நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வந்து விடுவார் என்று தமிழக பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தே.மு.தி.க.,வின் முடிவு குறித்தும் ஆலோசிக்கிறோம். எங்கள் கூட்டணிக்கு தே.மு.தி.க நிச்சயம்வரும் என்ற நம்பிக்கை தற்போதும் எங்களுக்கு உள்ளது என்றார்.

இதே போன்று தமிழருவி மணியனும் பா.ஜ.க அணியில் தே.மு.தி.க இடம்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என தொண்டர்களிடம் விஜய காந்த் கருத்துகேட்டார். தொண்டர்கள் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறினர். ஆனால் விஜயகாந்த் எந்தகருத்தையும் தெரிவிக்கவில்லை.

அதே சமயம் தொண்டர்கள் கூறும் கருத்தை தலைவர் மாற்றுவதற்கும் வாய்ப்புண்டு என்று அவர் கூறியுள்ளார். அதனால் விஜய காந்த் இன்னும் முடிவுசெய்யவில்லை என்று தெரிகிறது. பா.ஜ.க கூட்டணிக்கு நிச்சயம் அவர் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

Leave a Reply