பாஜக., பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடரப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுதமா சன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு பாஜக சார்பில் பாட்னாவில் நடத்தப்பட்ட ரதயாத்திரையில் குண்டுவெடித்தது.இந்த நிலையில், சென்னை அடுத்துள்ள வண்டலூரில் நரேந்திர மோடி கலந்துக்கொள்ளும் பொதுக் கூட்டத்தை பாஜக ஏற்பாடுகள் செய்துவருகிறது.

வண்டலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படும் எனவே இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்ககூடாது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தமனு விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இந்த வழக்கை பொதுநல வழக்காக கருதமுடியாது விளம்பர நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி வழக்கை தள்ளுபடிசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply