சென்னை அருகே வண்டலூரில் நரேந்திரமோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு குஜராத்மாநில போலீஸார் செவ்வாய்க் கிழமை வந்தனர்.

குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி வரும் 8-ஆம் தேதி சென்னை வண்டலூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக் கணக்கில் கூடுவார்கள் என காவல்துறையால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெரு நகர காவல் துறையும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் மோடியின் பாதுகாப்புக்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிறப்புபிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனர்.

அவர்கள், நரேந்திர மோடி விமான மூலம் வரும்பகுதி, காரில் செல்லும் சாலை, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

குஜராத் மாநில காவல்துறை , தமிழக போலீஸாருடன் இணைந்து பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் மீனம்பாக்கம் விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply