வேலை வாங்கிதருவதாக கூறி திருமணம் ஆன இளம்பெண்ணை கற்பழித்த ஆம் ஆத்மி தலைவர் ராமன் சுவாமியை கைதுசெய்துள்ளோம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்த ராமன் சுவாமி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி தலைவருடன் பாதிக்கப்பட்டபெண் நண்பராக பழகியுள்ளார். இந்நிலையில் தனதுவேலைக்கு உதவுமாறு பெண் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி அந்த பெண்ணை தன்னை சந்திக்க வருமாறு ராமன் சுவாமி கூறியுள்ளார். அங்கு அந்த பெண் சென்றதும், சுவாமி அவரை தனதுவீட்டிற்கு காரில் அழைத்து சென்று கற்பழித்துள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply