பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கொல்கத்தாவில் பிரிகேட்பரேடு மைதானத்தில் நடக்கிற பொதுக் கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசுகிறார். சாலைகளில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக , விமான நிலையத்திலிருந்து பந்தயத்திடல் மைதானத்துக்கு மோடி ஹெலிகாப்டரில் சென்று இறங்க திட்டமிட்டு அதற்கு அனுமதிகோரப்பட்டது.

ஆனால் கடைசி நிமிடத்தில் நேற்று ராணுவம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இது குறித்து மேற்கு வங்காள மாநில பா.ஜ.க தலைவர் ராகுல்சின்கா நிருபர்களிடம் பேசுகையில், ”பந்தயத்திடல் மைதானத்தை ஜனாதிபதி, பிரதமர்மட்டுமே பயன் படுத்த முடியும் என கூறிவிட்டனர். இதை முன்கூட்டியே சொல்லியிருக்கலாம். வேறு ஏற்பாடுகள் செய்திருப்போம். இது மத்திய அரசின் சதி தான்” என குற்றம் சாட்டினார்.இதுதொடர்பாக ராணுவம் எழுத்துப் பூர்வமாக தகவல்தெரிவிக்க மறுத்து விட்டதாகவும் அவர் புகார் கூறினார்.

Leave a Reply